சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, ஜூலை 26ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களின் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி, தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இவ்வாண்டின் பிற்பாதியின் பொருளாதாரப் பணி குறித்து, ஜனநாயக கட்சிகளின் பிரமுகர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டின் பொருளாதாரப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளும் வகையில், புதிய வளர்ச்சிக் கட்டமைப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது குறித்து, சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்க வேண்டும் என்றும், சந்தையின் மதிப்பீட்டை நிதானப்படுத்தி, சமூக நம்பிக்கையை வலுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பயன்தரும் முறையில் மேம்படுத்தி, சமூக நிலைத்தன்மையை நிலைநிறுத்தி, முழு ஆண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை உறுதியுடன் நனவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அவர் 3 விருப்பங்களை முன்வைத்தார். முதலாவதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வின் எழுச்சியை ஆழமாகக் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். இரண்டாவதாக, ஐக்கிய முன்னணியின் பொது கருத்து மற்றும் அரசியல் அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்குத் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.