சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பாராண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(45). இவருக்கு திருமணமாகி பவித்ரா(38) என்கிற மனைவியும், சௌத்தியா (8) மற்றும் சௌமிகா (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் சிவில் இன்ஜினியராக கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே வசித்து வரும் ராகேஷ் குமார், திருப்பதியில் நடைபெறும் தனது தம்பியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். சுக்மா மாவட்டம் அருகே தர்பந்தனா என்கிற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் சென்ற மழை வெள்ளத்தில் கார் அடுத்த சொல்லப்பட்டதாக தெரிகிறது. வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து நான்கு பேரும் வெளியேற முடியாமல் வெள்ளத்தில் சிக்கி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜ்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். திருப்பத்தூரில் திருமண வீட்டில் அவர்கள் உறவினர்கள் ராஜேஷ் குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்கள் 4 பேரும் உயிழந்து விட்டதாக அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அத்துடன் 4 பேரது உடல்களையும் சொந்த ஊருக்கு எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
