சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை எனும் சிறப்பு நிகழ்ச்சி ஹாம்பர்கில் நடைபெற்றது

Estimated read time 1 min read

சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை கலை நிகழ்ச்சியை உலகம் ஒன்றாக கண்டு களிப்பது என்ற சிறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 12ஆம் நாள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. சீன ஊடக குழுமம், ஹாம்பர்கிலுள்ள ஜெர்மனி-சீனா நட்பு சங்கம் ஆகியவை கூட்டாக இந்நிகழ்ச்சியை நடத்தின. சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியோங், ஹாம்பர்க் நகரின் மேயர் ஆகியோர் காணொளி வழியாக உரை நிகழ்த்தினர்.

ஷென் ஹாய்சியோங் கூறுகையில், நடப்பாண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சி பாய்ந்தோடும் குதிரை தடுக்க முடியாத முன்னேற்றம் என்பதை கருப்பொருளாக கொண்டு, 5ஜி, 4கே, 8கே, ஏஐ ஆகிய புத்தாக்க தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, 85 வகையான மொழிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு சிறந்த கலாசார விருந்து அளிக்க உள்ளது. வசந்த விழா கலை நிகழ்ச்சி வழங்கும் மகிழ்ச்சியான மற்றும் மங்கலமான சூழ்நிலையை உலகளாவிய ரசிகர்கள் அனுபவிக்கவும், நிறைந்த நம்பிக்கையுடன் வசந்த காலத்தை கூட்டாக வரவேற்கவும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author