சீனாவில் இருந்து கிளம்பிய புது ட்ரெண்ட்….!! 

Estimated read time 1 min read

சீனாவிலிருந்து பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் பழுத்த வாழைப்பழங்களை எரிந்து கொண்டிருக்கும் கரிக்கட்டைகளுக்கு நடுவில் வைத்து நன்றாகப் பழுக்க வைக்கிறார். பிறகு அதன் தோலை உரித்து, அதில் சில பொருட்களைச் சேர்த்து, ஒரு துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைக்கிறார். அதன் மேல் ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்தும்போது வடியும் சாற்றை எடுத்து, ஒரு குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கிறார். குக்கர் விசிலுக்குப் பதில் ஒரு பைப்பை மாட்டி, அதில் வடியும் திரவத்தை அந்தப் பெண் ருசித்து குடிப்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி இன்டர்நெட்.

சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. “இது ஒயின் கிடையாது, இது ஒரு வகை ஸ்பிரிட்” எனச் சிலர் கமெண்ட் செய்ய, “இதைப் குடிச்சா வயிறு என்னத்துக்கு ஆகும்? இது பாதுகாப்பானது தானா?” எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். “நானும் இதை டேஸ்ட் பண்ணி பார்க்கணும்” எனச் சில கில்லாடி நெட்டிசன்கள் சொன்னாலும், முறையான பக்குவம் இல்லாமல் இப்படிச் செய்வது உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author