மக்களிலிருந்து வந்த ஷி ச்சின்பிங், மக்களை மிக முக்கியமான இடத்தில் வைத்துள்ளார்.
2012ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங் கூறுகையில், இனிமையான வாழ்க்கைக்கான பொது மக்களின் எதிர்பார்ப்பு, நமது முயற்சிக்கான இலக்காகும் என்றார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, அவர் அடிமட்ட இடங்களில் 100க்கும் மேலான முறை ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற இரு கூட்டத்தொடர்களில், நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களின் உரையை அவர் கேட்டறிந்தார். பொது மக்களின் விருப்பங்களும், இன்னல்களும், கட்சி மத்தியக் கமிட்டி முக்கிய கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு, கவனத்தைப் பெற்றுள்ளன.
140 கோடிக்கும் மேலான மக்களுக்கு நாட்டின் அதி உயர் தலைவர் வழங்கிய தன்னலமற்ற அர்ப்பணிப்பு இதுவாகும். பொது மக்களின் விருப்பங்களை நனவாக்கும் விதம் பயனுள்ள பணியில் ஈடுபடுவது, அவரது மனவுறுதியாகும்.