“ரஜினியுடன் போட்டி தான்; பொறாமை கிடையாது”- கமல்ஹாசன்

Estimated read time 0 min read

தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை வந்துள்ளேன். மதுரைக்கு எப்போது வந்தாலும் அன்பு சூழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஆட்சிக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்களை குறைத்தும் மதிப்பிடக்கூடாது, அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது. நடிகர் ரஜினிகாந்திற்கும் எனக்குமானது போட்டி தானே தவிர, பொறாமையல்ல.

‘கமல்ஹாசன் முதல்வராக இருந்தால்’ என சிரித்த முகத்துடன் தான் ரஜினி சொன்னார்.தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான்” என்றார்.

You May Also Like

More From Author