விஜய் கட்சிக்கு ஓட்டம் பிடித்த முக்கிய புள்ளி: அலறும் அன்புமணி தரப்பு….!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாற்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலரும் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வடசென்னை பாமகவின் முக்கிய முகமான வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ‘லயன்’ KS கோபால், பாமகவிலிருந்து விலகி தற்பொழுது தவெக-வில் இணைந்துள்ளார்.

வி.எஸ். பாபு முன்னிலையில் தனது ஒட்டுமொத்த ஆதரவாளர்களுடன் அவர் தவெக-வில் ஐக்கியமாகியிருப்பது வடசென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையில் பாமகவின் அஸ்திவாரமாக இருந்த லயன் KS கோபால் திடீரென கட்சி மாறியிருப்பது அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சி நிர்வாகிகள் வரிசையாக விஜய்யின் கட்சியில் இணைந்து வருவது, தவெக-வின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த அதிரடி அரசியல் நகர்வு தற்பொழுது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author