பிப்ரவரி 10ஆம் நாள் முதல், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புருணை, வியட்நாம், லாவோஸ், மியான்மார், கம்போடியா ஆகிய 10 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பயணக் குழு (2பேருக்கு மேல்) யுன்னான் மாநிலத்தின் சிஷுவாங்பென்னா சோவுக்குள் நுழைய விசா விலக்குக் கொள்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகப் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.
இந்த விசா விலக்கு நடவடிக்கைகளின்படி,யுன்னான் மாநிலத்தின் சிஷுவாங்பென்னா சோவுக்குள் இந்த நாடுகளின் பயணக்குழுவினர் 6 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.
சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சுற்றுலா தொழிலின் வளர்ச்சியையும், சீனா மற்றும் வெளிநாட்டு மக்களின் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தையும் முன்னேற்றுவது, சீன-ஆசியான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்குவது ஆகியவற்றுக்கு இக்கொள்கை ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும்.