சீனாவுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவித்த வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்குடன் சமீபத்தில் பல நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் தொலைபேசி அல்லது கடிதம் மூலம் தொடர்பு கொண்டு, சீன மக்களுக்கு குதிரை ஆண்டின் வசந்த விழா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஷிச்சின்பிங்கிற்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த ரஷிய அரசுத் தலைவர் புத்தின், கடந்த ஓராண்டில் ரஷிய-சீன கூட்டாளியுறவு சீராக வளர்ச்சி அடைந்ததோடு செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிரேசில் அரசுத் தலைவர் லுலா கூறுகையில், இருநாட்டு மக்கள் குதிரை ஆண்டில் செல்வமடையவும் நலமுடனும் இருக்க வாழ்த்துகள் என்றும், சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை விரிவாக்க பிரேசில் விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

சீனாவை முக்கிய கூட்டாளியாக எப்போதுமே பார்க்கும் தென்னாப்பிரிக்கா, சீனாவுடனான கூட்டுறவை உறுதியுடன் முன்னேற்றி, ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி, கூட்டு செழுமையைத் தூண்ட செயல்படுவதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் கூறினார்.

சௌதி அரேபிய மன்னர், ஐக்கிய அமீரகத்தின் அரசுத் தலைவர், கியூபாவின் புரட்சித் தலைவர் மற்றும் அரசுத் தலைவர், இலங்கை அரசுத் தலைவர், நேபாள அரசுத் தலைவர், மாலதீவு அரசுத் தலைவர், பாகிஸ்தான் தலைமை அமைச்சர், மங்கோலிய அரசுத் தலைவர், லவோஸ் அரசுத் தலைவர், ஈரான் அரசுத் தலைவர், இஸ்ரேல் அரசுத் தலைவர், ஆஸ்திரிய அரசுத் தலைவர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும், ஐ.நா. தலைமைச் செயலாளர், ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ஷிச்சின்பிங்கிற்கு வசந்த விழா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author