இசையில் புதிய சாம்ராஜ்யம்: சொந்தமாக ஆடியோ லேபிளை தொடங்கினார் அனிருத்  

Estimated read time 1 min read

முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக ‘Albuquerque Records’ என்ற சொந்த ஆடியோ லேபிளை தொடங்கியுள்ளார்.
பிரபல அமெரிக்க தொடரான ‘Breaking Bad’-ஆல் ஈர்க்கப்பட்டு தனது ஸ்டுடியோவிற்கும், தற்போது தனது ஆடியோ லேபிளிற்கும் அவர் சூட்டியுள்ளார்.
இந்த ஆடியோ லேபிளின் மூலம் தனது திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி, Independent Artists படைப்புகளுக்கும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்க அனிருத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,”திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே எனக்குச் சுயாதீன இசையில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த லேபிள் எனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கு ஒரு வீடாக அமையும். திறமையான புதிய கலைஞர்களை உலகிற்கு அடையாளம் காட்டுவதே எங்களது நோக்கம்,” என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author