5ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி ஏப்ரல் 13 முதல் 18ஆம் நாள் வரை ஹைநான் மாநிலத்தின் ஹைகோ நகரில் நடைபெறவுள்ளது.
நடப்புப் பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாக பிரிட்டனும், கௌரவ விருந்தினர் மாநிலமாகப் பெய்ஜிங்கும் பங்கேற்கவுள்ளன. இப்பொருட்காட்சியில் கௌரவ விருந்தினர் மாநிலம் என்னும் தகுநிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஸ்லோவாக்கியா, பிரேசில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் குழுக்கள் நடப்புப் பொருட்காட்சியில் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளன.
மேலும், நடப்புப் பொருட்காட்சியில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய நுகர்வு சார்ந்த அம்சங்கள் முக்கியமாக காட்சிக்கு வைக்கப்படும்.