இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தனது சீரற்ற ஃபார்மிற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஷுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை பதிவு செய்த நான்காவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளார்.
முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை பதிவு செய்திருந்த நிலையில், அந்த பட்டியலில் தற்போது கில்லும் இணைந்துள்ளார்.
அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்
