பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் பிழைகள் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவை ‘United States of America’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘Unites States of Americas’ என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் தாக்குதலின் போது, கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக தவறான ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய ராஜதந்திரக் குளறுபடி நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பின் பேரில் ‘அமைதி வாரியம்’ கூட்டத்தில் பங்கேற்க வாஷிங்டன் சென்றுள்ள ஷேபாஸ் ஷெரீப், அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார்.
PR No.4⃣9⃣/2⃣0⃣2⃣6⃣
Deputy Prime Minister and Foreign Minister Concludes One-Day Official Visit to New York.
https://t.co/5UmLpF6vlU pic.twitter.com/fFVNSvEUQH
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) February 19, 2026
“>
சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் இந்த முக்கியமான கூட்டத்தில், பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்துப் பேசுவதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது.
இருப்பினும், நாட்டின் பிரதமரின் பயண அறிக்கையையே சரியாகச் சரிபார்க்க முடியாத பாகிஸ்தான் அரசின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



