அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு “பெரிய அடியை” ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யாவின் “மிகப்பெரிய அல்லது இரண்டாவது பெரிய எண்ணெய் வாங்குபவர்களில்” ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.
டிரம்பின் இந்த கருத்து, அடுத்த வாரம் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பிற்கு முன்னதாக வந்துள்ளதும் குறிப்பிடதக்கது.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷ்யாவின் பொருளாதாரம் “நன்றாகச் செயல்படவில்லை” என்றும், அமெரிக்க வர்த்தக வரிகள் மற்றும் உலகளாவிய அழுத்தங்களின் ஒருங்கிணைந்த விளைவால் “மிகவும் தொந்தரவு” அடைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
