Stop, Think, Act என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்; பிரதமர் மோடி வேண்டுகோள்..!! 

Estimated read time 1 min read

இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கவலை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது ரகசியத் தகவல்களான ஓடிபி (OTP), ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என அவர் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, மூத்த குடிமக்கள் குறிவைக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் சூறையாடப்படுவதைக் கண்டு வேதனை அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், சிபிஐ அல்லது போலீஸ் அதிகாரிகள் என யாராவது போனில் மிரட்டினால் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தினார்.

“நில்லுங்கள், யோசியுங்கள், செயல்படுங்கள்” (Stop, Think, Act) என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author