சீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலுடன் 18ஆம் நாள் சந்திப்பு நடத்தவுள்ளார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் இதுவரையிலான முதலாவது உயர்நிலை பேச்சுவார்த்தை இதுவாகும்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 17ஆம் நாள் கூறுகையில்,
சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 23வது பேச்சுவார்த்தை 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. தொடர்புடைய தகவல்களை சீனா உரிய நேரத்தில் வெளியிடும் என்றார்.
மேலும், இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துகளைச் செவ்வனே செயல்படுத்தி, தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய அக்கறை கொண்ட பிரச்சினைகளுக்கு மதிப்பு அளித்து, பேச்சுவார்த்தையின் மூலம் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கையாண்டு, இரு நாட்டுறவு வெகுவிரைவில் சீரான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.