செப்டம்பர் 5ம் நாள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பழைய பெயரை மீட்டெடுத்து, அதனை போர் அமைச்சகமாக மாற்றிய நிர்வாக கட்டளையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் கையொப்பமிட்டார்.
2வது உலக போர் நிறைவு பெற்ற 80 ஆண்டுகளுக்குப் பின், “போர்”என்ற சொல் கூர்மையாக விளங்கி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், 2023, 2024ம் ஆண்டுகளில் உலகின் 38 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 71 மக்களிடம் மேற்கொண்ட பொது கருத்து கணிப்புகளின் முடிவில், அமெரிக்கா, உலகளவில் மிக பெரிய யுத்த வெறி கொண்ட நாடாகும் என்று 61.3 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். அமெரிக்கா வெளிநாடுகளில் தொடுத்த போர், உலகளவில் கடுமையான மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று 70.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.