Breaking: தமிழக அரசியலில் முதல் முறை..! வரலாற்றில் இடம் பிடித்தார் ஓபிஎஸ்… ஏன் தெரியுமா…? 

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இனி இணைய வாய்ப்பில்லை என்ற சூழலில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் நீண்டகால அரசியல் பயணத்தின் முக்கிய மைல்கற்களைக் கீழே காணலாம். கடந்த 2001-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த 2001 செப்டம்பர் – 2002 மார்ச் வரை டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தபோது, முதல்முறையாக முதல்வரானார்.

பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். கடந்த 2016 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். 2017 பிப்ரவரி 7-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தர்ம யுத்தம்’ தொடங்கி, கட்சியில் தனக்கான உரிமையை நிலைநாட்டப் போராடினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். “ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆக இருந்தவர் வேறு கட்சியில் இணைந்தது தற்போது புதிய வரலாறாக மாறி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author