சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் தலைமையமைச்சருமான லிச்சியாங் 13ஆம் நாள் பிற்பகல் பொருளாதார நிலைமை பற்றிய நிபுணர்கள் மற்றும் தொழில் நிறுவனர்களின் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தற்போதைய பொருளாதார நிலைமை, அடுத்த பொருளாதாரப் பணி ஆகியவற்றுக்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அவர் கேட்டறிந்தார்.
அவர் கூறுகையில், தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி பன்முகங்களிலும் உள்ளப்படியாகவும் அறிந்து கொண்டு, பொருளாதார இயக்கத்தில் தோன்றிய புதிய மாற்றத்தை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
தொழில் நிறுவனர்கள் வளர்ச்சி நம்பிக்கையை உறுதிப்படுத்தி, தேவை மற்றும் தொழிற்துறை மேம்பாட்டு வாய்ப்புகளை ஆழமாகத் தேடி, உண்மைப் பொருளாதாரத்தில் உறுதியாக ஈடுபட்டு, வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கு மேலதிகமாக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
