டி20 உலகக்கோப்பை 2026: அரையிறுதிக்குச் செல்ல பாகிஸ்தான் செய்ய வேண்டியது என்ன?  

Estimated read time 1 min read

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில், நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்ற முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து ஏற்கனவே 6 புள்ளிகளுடன் (3 போட்டிகளில் 3 வெற்றி) அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
தற்போது இரண்டாவது இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் (+1.390 NRR) முன்னிலையில் உள்ளது. ஒரு புள்ளியுடன் இருக்கும் பாகிஸ்தான், இன்று இலங்கையுடன் மோத உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author