ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!

Estimated read time 0 min read

ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவதாக உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடகா – ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இதில் கர்நாடகாவை எளிதில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி ரூபாய்க்கான ரொக்கப்பரிசு வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணியினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You May Also Like

More From Author