“தமிழ்நாடு 2030” – பெரிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

Estimated read time 1 min read

சென்னை : இன்று (மார்ச் 6, 2026) ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக கலந்து கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் 2030-ஆம் ஆண்டு பார்வையை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டது.

முதலமைச்சர் தனது உரையில் சிறுபான்மையினர் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தார். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் சமூக நீதி விடுதிகள் உருவாக்கப்படும். சிறுபான்மையினர் கடன் பெறும் முறைகள் எளிமையாக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் பள்ளி இடைநிறுத்தத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கிராமப்புற வளர்ச்சிக்காக உத்தமர் காந்தி மாதிரி திட்டம் முதற்கட்டமாக 10 ஊராட்சிகளில் இன்றே தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன தொழிற்பூங்காக்கள் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப ஆக்கியங்கள் அமைக்கப்படும். சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் உருவாக்கப்படும்.2030-க்குள் கிராமங்களில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.கல்வித்துறையில் 2030-க்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 100% ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டுத்துறை உளவியல் பயிற்சியும், வாழ்க்கை திறன் கல்வியும் அறிமுகப்படுத்தப்படும்.

உயர்கல்வியில் AI கல்வியும், AI ஆய்வகங்களும் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.ஒட்டுமொத்தமாக, ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சி மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சி திட்டங்களை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. சிறுபான்மையினர் நலன், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தமிழகத்தை 2030-இல் முன்னணி மாநிலமாக மாற்றும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author