போர்ச்சுகல் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

போர்ச்சுகல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற அன்டோனியோ ஜோஸ் செகுரோவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 9ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் அவர் கூறுகையில், சீனாவும் போர்ச்சுகலும் ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகள் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 47ஆண்டுகளில், ஒன்றுக்கொன்று மதிப்பளித்து ஆதரவளிப்பதில் ஊன்றி நின்றுள்ளன. சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒருங்கிணைப்பை மேற்கொண்டு இரு தரப்புறவு எப்போதும் சுமுகமாகவும் நிதானமாகவும் வளர்ந்துள்ளது. சீன-போர்ச்சுல் உறவின் வளர்ச்சிக்கு நான் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளேன். அரசுத் தலைவர் செகுரோவுடன் இணைந்து நெடுநோக்கு ரீதியிலான தொடர்பை வலுப்படுத்தி ஒன்றுக்கொன்று உயர் நிலை நம்பிக்கையை நிலைப்படுத்தி உயர் தர ஒத்துழைப்பை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.  

 

Please follow and like us:

You May Also Like

More From Author