சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் துவக்கம்

சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. “வளர்ந்து வரும் சீனா” என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும்.


2 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தில், முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பொறுப்பாளர்களும், உலகளவில் பல புகழ் பெற்ற அறிஞர்களும் சீனாவின் தொடர்ச்சியான வளர்ச்சி தொடர்பான பல அம்சங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளனர்.


சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் 2000ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்டது முதல் தற்போது வரை 23 முறை நடத்தப்பட்டுள்ளது.

சீன அரசின் உயர் நிலை அலுவலர்கள், உலக அளவிலான வணிகத் துறைத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், சீனா மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் முதலியோர் பரிமாற்றம் செய்யும் முக்கிய மேடையாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author