முடிவுக்கு வரும் போர்..! “மத்திய கிழக்கில் குறையும் பதற்றம்”… ஈரானுக்கு கிரீன் சிக்னல் காட்டிய டிரம்ப்…? ஆனால் ஒரு டுவிஸ்ட்.. என்ன நடக்குமோ..? 

Estimated read time 0 min read

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடர உள்ளதால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியை 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லை என்றால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பது, மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு அடுத்த வாரம் நடைபெறும் ஆலோசனைகளுக்குப் பிறகே எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும். இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் தற்போது வாஷிங்டன் மற்றும் ஈரான் பக்கமே திரும்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author