ஹஜ் புனித யாத்திரை செல்ல போறீங்களா..? புதிய விதிகளை அறிவித்தது சவுதி..!

Estimated read time 1 min read

ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, ‘நுஸுக்’ அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு, ‘மொபைல் போன்’ வாயிலாக டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அச்சிடப்பட்ட வடிவிலும் அட்டை வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுதும் யாத்ரீகர்கள் எப்போதும் தங்கள் உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ நுஸுக் அட்டையை உடன் வைத்திருக்காத யாத்ரீகர்களுக்கு, சவுதி அரேபிய அதிகாரிகள் வாயிலாக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சேவைகள் மறுக்கப்படலாம். எனவே, அனைத்து யாத்ரீகர்களும் இந்த விதிக்கு கண் டிப்பாக கட்டுப்படுவது அவசியம் என, இந்திய ஹஜ் குழுவும் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author