சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 20ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 3ஆம் நாளில், பெய்ஜிங் மாநகரில் மாபெரும் இராணுவ அணி வகுப்பு நடைபெறவுள்ளது. அணிவகுப்பை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் பார்வையிட்டு ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
இந்த இராணுவ அணி வகுப்பு, புதிய காலக்கட்டத்தில் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முழுமையாக முன்னேற்றும் போக்கில் நடைபெறும் முதலாவது அணி வகுப்பாகும். சீன இராணுவப் படை ஆற்றல் கட்டுமானம் சீரமைக்கப்பட்ட புதிய கட்டமைப்பு இதில் முதன்முறையாக வெளிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
