இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 30) வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவும் மந்தநிலை இந்தியச் சந்தையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,018 புள்ளிகள் சரிந்து 72,565 என்ற நிலையை எட்டியது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 269 புள்ளிகள் குறைந்து 22,549 என்ற நிலைக்குச் சென்றது.
இந்திய பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
Estimated read time
0 min read
