போலிவிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் போலிவியாவும் நெருக்கமான நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 40 ஆண்டுகாலத்தில், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகின்றது. முக்கிய நலன்கள் மற்றும் அந்தந்த நாட்டு கவனமான பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நின்ற போலிவியாவுக்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது.
இரு நாட்டுறவில் நான் உயர்வாக கவனம் செலுத்துகிறேன். பாஸ் அவர்களுடன் இணைந்து, கூட்டாக பாடுபட்டு, சீன-போலிவிய நெடுநோக்கு கூட்டாளியுறவை புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைத்து இரு நாட்டு மக்களுக்கு மேலதிகமான நலன்களை தர விரும்புகிறேன் என்றார்.
