ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கிர்கிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஊடக குழுமமும் கிர்கிஸ்தானின் தேசிய தொலைகாட்சி, வானொலி நிறுவனமும், உள்ளூர் நேரப்படி, ஆகஸ்ட் 30ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெகில், 2026 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்ச்சியை கூட்டாக நடத்தின. கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சாதிர் ஜபரோவ் இந்நடவடிக்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நடவடிக்கை பல சாதனைகளைப் பெறும் என்று அவர் வாழ்த்து தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, செய்திஊடகம் போன்ற துறைகளில் புகழ் பெற்றவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். தொடச்சியான ஒத்துழைப்புச் சாதனைகள் இந்நடவடிக்கையில் வெளியிடப்பட்டன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் இந்நடவடிக்கை குறித்து கூறுகையில்,
இவ்வாண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகும். உலகில் மிகுந்த செல்வாக்கு வாய்ந்த பிராந்திய அளவில் சர்வதேச நிறுவனமாக இவ்வமைப்பு திகழ்கிறது. ஷாங்காய் எழுச்சி எனும் கண்ணோட்டத்தை சீன ஊடக குழுமம் எப்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு செய்திஊடகங்களுடன் இணைந்து, ஒத்துழைப்பு அமைப்புமுறையைக் கூட்டாக கட்டியமைத்து, தலைசிறந்த நிகழ்ச்சிகளைப் படைக்க சி.எம்.ஜி முயற்சி செய்யும். இத்தகைய நாடுகளின் செய்திஊடகங்களுடன் சேர்ந்து, பரவல் வடிவங்களைப் புத்தாக்கம் செய்து, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கியுள்ள 4 உலக முன்மொழிவுகளை கையோடு கை கோர்த்து செயல்படுத்தி, மனித குலத்தின் பொது சமூகம் எனும் இலக்குகளை நடைமுறைப்படுத்த சி.எம்.ஜி விரும்புவதாக கூறினார்.
