காங்கோ குடியரசின் அரசு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாஸோவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

காங்கோ குடியரசின் அரசு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டெனிஸ் சாஸோ நிகுவெஸோவுக்கு சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 30ஆம் நாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

அவர் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் நம்பிக்கை தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்புக்கான பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் இணைத்தலைவர் பதவி வகிக்கும் நாடுகளாக, இரு நாடுகளும் தங்கள் பொறுப்புகளை கூட்டாக நிறைவேற்றி, சீன-ஆப்பிரிக்க உறவுகள் மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வழிகாட்டும் பங்கை ஆற்றியுள்ளன. சீனா-காங்கோ உறவுகளின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், புதிய யுகத்தில் அனைத்துக் நிலைகளிலான சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்குப் பெரும் பங்காற்றவும் சாஸோவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author