மரம் நடும் முயற்சியில் முழு சமூகம் பங்கெடுக்குமாறு ஷிச்சின்பிங் அழைப்பு

Estimated read time 0 min read

காடு வளர்ப்பு நடவடிக்கையில் முழு சமூகம் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்குமாறு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பு விடுத்ததோடு, சீரான சுற்றுச்சூழல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அதற்கு கூட்டு முயற்சிகள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் மார்ச் 30ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் மரங்களை நடும் தன்னார்வ நடவடிக்கையில் பங்கெடுத்தார். அப்போது ஊழியர்கள் மற்றும் பொது மக்களுடன் உரையாடிய அவர் மேலும் கூறுகையில், மரம் நடுதல் மற்றும் காடு வளர்ப்பு, அழகான சீனாவின் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான கடமையாகும். தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வை மற்றும் விடா முயற்சியுடன் தேசம் மற்றும் மக்களுக்கு நன்மை தரும் இப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகவும், மரம் நடும் தன்னார்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 45ஆவது ஆண்டாகவும் இவ்வாண்டு திகழ்கிறது. புதிய நிலைமையில் நாட்டின் பசுமைமயமாக்கத்தை முன்னேற்றுவதில், சூழலியல் மற்றும் தொழில் வளர்ச்சியை கூட்டாக மேம்படுத்தி, மனிதர்கள் மற்றும் இயற்கையின் சக வாழ்வை நனவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author