சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 14ஆம் நாள், ஈக்வடார் அரசுத் தலைவர் டேனியல் நோபோவா சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவும் ஈக்வேடாரும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியாக விளங்குகின்றன. இவ்வாண்டு, இரு தரப்புகளின் பன்முகநெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது நிறைவு ஆண்டாகும். கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளும் தங்கள் அரசுத் தலைவர்களின் தலைமையில், இரு தரப்புறவு சீராக வளர்ந்து வரும் முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தியுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமான ஒத்துழைப்பு ஆவணங்கள் மற்றும் தாராள வர்த்தக உடன்படிக்கையில் இரு தரப்பும் கையொப்பமிட்டுள்ளன. அரசுத் தலைவர் டேனியல் நோபோவா சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இப்பயணத்தின்போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இப்பயணத்தின் மூலம், இரு நாட்டின் ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்புகளின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை விரைவுபடுத்தி புதிய முன்னேற்றங்களைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
ஈக்வேடார் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது பற்றிய சீனாவின் பதில்
You May Also Like
சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி சேவை வளர்ச்சி
April 7, 2024
சீன நாடளவில் மோதுமை அறுவடைப் பணி பாதியளவு வெற்றி
June 6, 2025
