சீர்திருத்தமானது உணரக்கூடிய பயன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்த வேண்டும்:சீனா கருத்து

ஐ.நாவின் அதிகாரம் அளித்தல் பற்றிய சீர்திருத்தம், உணரக்கூடிய பலன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்துவதோடு, வெற்று சம்பிரதாயம் மற்றும் அதிகாரத்துவத்தையும் தேவையற்ற மற்றும் ஒன்றுடன் ஒன்று மேலான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பழைய தவறுகளையும் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லெய் தெரிவித்தார்.

திறன் மற்றும் பயன்மிக்க ஐ.நாவுக்கான அதிகாரத்தின் உருவாக்கம், நடைமுறையாக்கம் மற்றும் பரிசீலனை பற்றிய ஐ.நா. பேரவையின் வரைவு தீர்மானம் மார்ச் 31ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான வாக்களிப்பு விளக்க உரையில் அவர் கூறுகையில், தற்போது சர்வதேச நிலைமை மேலும் கொந்தளிப்பாக மாறி வரும் நிலையில், உலகளாவிய சவால்கள் அதிகரித்து, பலதரப்புவாதமும் ஐ.நாவும் பெரும் தாக்கத்தை எதிர்நோக்குகின்றன என்று குறிப்பிட்டார். ஐ.நா. தன்னை சீர்திருத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கும், காலத்துக்கு ஏற்ப முன்னேறுதலுக்கும், உறுப்பு நாடுகளால் வழங்கப்படும் அதிகாரத்தை சீராக நிறைவேற்றுதலுக்கும் சீனா ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம், ஐ.நாவின் 80ஆவது ஆண்டு நிறைவு சீர்திருத்த முன்னெடுப்பின் முக்கிய பகுதியாக, அதிகாரத்தின் உருவாக்கம், செயலாக்கம் மற்றும் பரிசோதனையை மேம்படுத்துவதற்கு முக்கிய கோட்பாடுகள் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பயனுள்ள முறையில் செயலாக்கப்பட்டு, உறுப்பு நாடுகள் மற்றும் செயலகத்துக்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author