ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்தணும்..? வெளியான தகவல்…!!! 

Estimated read time 1 min read

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்படவுள்ளதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, ஜூலை 15 ஆம் தேதி முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களும் FASTag வழியாக சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விதிக்கப்படாத நிலையில், புதிய மாற்றம் சாத்தியமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இரு சக்கர வாகனங்களையும் FASTag கட்டண திட்டத்தில் இணைப்பதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

FASTag கட்டாயம்? இரு சக்கர வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும்?

இரு சக்கர வாகன உரிமையாளர்கள் FASTag வாங்கி தங்கள் வாகனங்களில் ஒட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இதன் மூலம், அனைத்து வாகனங்களிடமிருந்தும் சீரான முறையில் சுங்க வரி வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நான்கு சக்கர வாகனங்களுக்கே மட்டும் சுங்க கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சுங்க செலவு ஏற்படும்.

நெடுஞ்சாலை பராமரிப்பு செலவுக்கு அனைவரும் பங்களிக்கவே திட்டம்?

அரசு வட்டாரங்களின் கூற்றுப்படி, நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான நிதியை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து வகையான வாகனங்களிடமிருந்தும் சுங்க வசூல் செய்யப்படும். இது குறித்த இறுதி அறிவிப்பு வெளியாவதற்குள், மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

மேலும், கடந்த வாரம் வெளியான அறிவிப்பின்படி, FASTag-ஐ ஆண்டுதோறும் புதுப்பிக்க ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இது ஆகஸ்ட் 15 முதல் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉

முக்கியம்: இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கம் கட்டாயமாகும் என்ற தகவல் தற்போது ஊடகங்களில் மட்டுமே கூறப்பட்டு வருகின்றது. அரசு தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தல் இல்லை. FASTag திட்டத்தில் மாற்றம் வந்தால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author