14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, சீனாவில் முன்னணி வர்த்தக நாடாகக் கட்டியமைக்கும் பணி சீராக முன்னேறி வருகின்றது.
2024ஆம் ஆண்டு சீனாவின் சரக்கு வர்த்தக அளவு 6 இலட்சத்து 16 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது 13ஆவது ஐந்தாண்டு திட்ட முடிவின் போது இருந்ததை விட 32.4 விழுக்காடு அதிகம். இத்துறையில் சீனா தொடர்ந்து 8 ஆண்டுகளாக உலகின் முதலிடம் வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2024ஆம் ஆண்டு சீனாவின் சேவைத் துறை வர்த்தக அளவு முதன்முதலாக 1 இலட்சம் கோடி டாலரைத் தாண்டி, உலகின் 2ஆவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதித் துறையில் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்கு கடந்த ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இருந்த 56 விழுக்காட்டிலிருந்து 64.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்பட்டு வருகின்றது. 2024ஆம் ஆண்டு, அறிவு சார்ந்த சேவைத் துறையின் வர்த்தக அளவு 38 விழுக்காடு அதிகரித்தது. ஏற்றுமதித் துறையில் புதிய உயர் தொழில் நுட்ப உற்பத்தி பொருட்களின் பங்கு 18.2 விழுக்காடாக உள்ளது.