சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அழைப்பையேற்று ஜூலை 5முதல் 8ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
மேலும், எகிப்து தலைமை அமைச்சர் மட்பௌலியின் அழைப்பிங்கிணங்க, லிச்சியாங் ஜூலை 9, 10ஆம் நாளில் எகிப்தில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் அம்மையார் 2ஆம் நாள் இத்தகவலைத் தெரிவித்தார்.
மௌநிங் மேலும் கூறுகையில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறை தற்போதைய உலகில் புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மேடையாக விளங்குகிறது. சமத்துவம் மற்றும் சீரான உலகின் பலதுருவமயமாக்கத்தையும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தையும் முன்னேற்றுவதற்கான முக்கிய சக்தியும் இதுவாகும் என்றார்.