இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள ‘ஸ்கோப் சினிமாஸ் மல்டிபிளெக்ஸ்’ திரையரங்கில் 2026-ஆம் ஆண்டுக்கான இலங்கை-சீனத் திரைப்பட விழா, வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாகத் தொடங்கியது.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை, ஆறு நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திரைப்பட விழாவில், புகழ்பெற்ற ஆறு சீனத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் ‘ஆல் விஷஸ் கம் ட்ரூ’ எனும் அனிமேஷன் திரைப்படமும், சர்வதேச அதிரடி நாயகன் ஜாக்கி சான் நடித்த அதிரடித் திரைப்படமான ‘தி ஷேடோஸ் எட்ஜ்’ ஆகியவையும் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங், திரைப்படங்கள் எல்லைகளைக் கடந்து மக்களின் இதயங்களை இணைக்கும் பாலங்களாகச் செயல்பட முடியும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் இந்தத் திரைப்பட விழா பெற்று வரும் பெரும் வரவேற்பைப் பாராட்டிய, இலங்கைத் திரைப்பட இயக்குநரும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சுதத் மஹதிவுல்வெவ இந்த நிகழ்வு இலங்கை மற்றும் சீனத் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆழமான உரையாடல்களுக்கும் ஒத்துழைப்புக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவின் தொடக்க நிகழ்வில் தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கும் வெளிநாட்டு சீனர்களின் கதைகளை விவரிக்கும் ‘டியர் யூ’ எனும் சீனத் திரைப்படம் திரையிடப்பட்டது.
