ஷென்சோ-23 விண்வெளி வீரர்களுக்கும் ஷென்சோ-24 விண்வெளி வீரர்களுக்கும் இடையில் 28ஆம் நாள் பிற்பகல் தியேன்குங் விண்வெளி நிலையத்தில் பணி ஒப்படைப்பு நடத்தப்பட்டது. இதில் விண்வெளி நிலையத்தின் சாவியும் ஒப்படைக்கப்பட்டது.
திட்டப்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த விண்வெளி வீரர் முகாமத் சிசான் அலி 2 சீன விண்வெளி வீரர்களுடன் ஷென்சோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பவுள்ளார்.
தற்போது, லேண்டர் பகுதியில் அவர்களை வரவேற்கும் பணிகளும் பல்வேறு சாதனத் தொகுதி ஏற்பாடுகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
