சீன ஊடகக் குழுமமும் இலங்கைத் தேசிய தொலைகாட்சி நிலையமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள சீன-இலங்கை பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை 27ஆம் நாள் கொழும்புவில் நடைபெற்றது. இலங்கை தலைமை அமைச்சர் அமரசூரியா இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், 2027ஆம் ஆண்டு இலங்கை-சீனத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிசி மற்றும் ரப்பர் வர்த்தக உடன்படிக்கை உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது என்று தெரிவித்தார். ஏற்கனவேயுள்ள ஒத்துழைப்புகளின் அடிப்படையில், இரு நாடுகளும் சேர்ந்து மேலும் வலுவான எதிர்காலக்கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷேன் ஹாய்சியுங் கூறுகையில், இலங்கையின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, உயர் தர ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையையும் இரு நாடுகளின் பொதுவான எதிர்காலத்தையும் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும், இரு நாட்டு நட்புறவின் புதிய அத்தியாயத்தைக் கூட்டாக எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதே நாள், சீன-இலங்கை தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமமும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்புடன் பட்டுப் பாதையின் செழுமை என்ற தொடருக்கான சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் துவங்கியது.
