உலகப் பொருளாதாரம் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்த IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) 8ஆம் நாள் உலகப் பொருளாதார முன்னாய்வு அறிக்கைக்கான புதுப்பித்தல் வெளியிட்டது. அதில் 2026ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3விழுக்காடு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரலில் மதிப்பிடப்பட்டதை விட, 0.1விழுக்காடு குறைவு. மத்தியக் கிழக்குப் பகுதியிலுள்ள போர் ஏற்படுத்திய பாதிப்பை இந்தக் குறைப்பு வெளிக்காட்டியுள்ளது என்று உலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய மதிப்பீட்டின்படி, இவ்வாண்டு வளர்ந்த நாடுகள், புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முறையே 1.7விழுக்காடு மற்றும் 3.8விழுக்காடு அதிகரிக்கும். அவற்றில் சீனாவின் வளர்ச்சி 0.2விழுக்காடு உயர்ந்து 4.6விழுக்காடாக அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் துறையில் சீனா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளதும், தொடர்புடைய ஏற்றுமதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துள்ளதும் இதற்கான முக்கியக் காரணமாகுமென்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author