அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் காக்னிசண்ட் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி  

Estimated read time 1 min read

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசா வேட்டை குறித்துப் பேசிய உயர் அதிகாரி ஒருவர், உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான Cognizant பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுள்ளதால், அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கத் தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இதுகுறித்துக் கூறுகையில், வெளிநாட்டுத் தொழிலாளர் விசா முறைகேடுகளைத் தடுப்பதற்காக டிரம்ப் அரசு எடுத்துள்ள மிக ஆக்ரோஷமான நடவடிக்கை இது என்றும், இந்த விசாரணையின் முதற்கட்டமாக ஏற்கனவே பல டஜன் கணக்கான நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author