விமான நிலையக் கட்டணங்களைக் குறைத்தது மத்திய அரசு: டிக்கெட் விலை குறையுமா?  

Estimated read time 0 min read

போர்ச் சூழலால் விமான போக்குவரத்துத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
குறிப்பாக, விமான எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், விமானக் கட்டணங்கள் உயர்வதைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, உள்நாட்டு விமானங்களுக்கான தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிடம் கட்டணங்களை 25% குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும்.
எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம், சாமானிய மக்களுக்கு விமானப் பயணம் தொடர்ந்து மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மை இலக்காகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author