மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.
சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. மேலும் நிஃப்டியும் 25,000 ஐ நெருங்கியுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட், பங்குச்சந்தையின் உயர்வை மேலும் நீட்டிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கம், மூலதனச் செலவினத்தை (கேபெக்ஸ்) அதிகரிக்கும் என்றும், கொள்கை தொடர்ச்சியை பராமரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், பங்குச் சந்தையின் சில துறைகள் அதிக பலன்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்(PSUs) பங்குகள் அதிகம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
