15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக் கூட்டம் ஜுன் 25 முதல் 27ஆம் நாள் வரை சீனாவின் தாலியன் நகரில் நடைபெறவுள்ளது.
தற்போது வரை இக்கூட்டத்துக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொது மற்றும் தனியார் பிரிவுகளின் 1600 தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற இம்மன்றக் கூட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் பொருளாதார அதிகரிப்புக்கான புதிய முன்னணி” என்ற தலைப்பில் நடப்பு மன்றக் கூட்டத்தில் சுமார் 200 கிளை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. “உலகின் புதிய பொருளாதாரம்”, “சீனா மற்றும் உலகம்”, “செயற்கை நுண்ணறிவு காலத்தில் தொழில் முனைவோரின் எழுச்சி”, “தொழிலின் புதிய முன்னணி”, “மனிதருக்கான முதலீடு”, “காலநிலை, இயற்கை மற்றும் எரிசக்தி ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு” முதலிய 6 துறைகள் தொடர்பாக இக்கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.