பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கடலோர காவல் படையை நவீனமயமாக்கும் வகையில், அமெரிக்கா 80லட்சம் டாலர் உதவி அளிக்கும் என்று பிலிப்பைன்ஸிலுள்ள அமெரிக்க தூதரகம் சமீபத்தில் தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம், இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றபோது, Typhon ஏவுகணை அமைப்பு பிலிப்பைன்ஸின் லூசோன் தீவில் நிறுவப்பட்டது.
பிராந்திய அமைதியை கடுமையாக அச்சுறுத்தி, ஆயுதப் போட்டிகளைத் தூண்டி, பதற்ற மற்றும் பகைமை நிலையை ஏற்படுத்தும் இச்செயலுக்கு பல அண்டை நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் தரைப்படையின் செய்தி தொடர்பாளர் கடந்த ஜுலையில் பேசுகையில், Typhon, ஏவுகணை அமைப்பு செப்டம்பருக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப செல்லப்படும் என்று கூறினார்.
ஆனால், அண்மையில் பிலிப்பைன்ஸ் தரைப்படையின் செய்தி தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், Typhon ஏவுகணை அமைப்பு பிலிப்பைன்ஸில் எவ்வளவு நேரம் நிலைநிறுத்தப்படும் என அமெரிக்கா முடிவெடுக்கும். பிலிப்பைன்ஸின் இந்த அறிவிப்பு, அண்டை நாடுகளுக்கு மத்தியில் கோபத்தை கிளறும் அதேவேளையில், உள்நாட்டில் பரந்த அளவிலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உண்மையில் நம்பகமானதா? அமெரிக்காவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு கிடைப்பது, “இனிப்போ” அல்லது “விஷ மாத்திரையோ” ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்கா உதவி நிதி வழங்கி மோதலை உருவாக்குவதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பது ரகசியம் அல்ல. 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிநாட்டு ஆயுத விற்பனைத் தொகை 23800 கோடி டாலரை எட்டி, புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்புறத்தில் இந்த வழிமுறை இயங்கும். ஆனால், அது தொடர்புடைய நாடுகளுக்கு கொண்டு வந்து பின்விளைவுகள், மோதல், குழப்பம், பிரிவினை மற்றும் பகைமை ஆகியவை தான். தற்போது, பிலிப்பைன்ஸில் அமெரிக்காவின் அத்தகைய தந்திரம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.