மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய ஹான் ஜெங்

பெய்ஜிங்கில் 10ஆம் நாள் நடைபெற்ற மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் துவக்க விழாவில், சீன துணை அரசுத் தலைவர் ஹான் ஜெங் கலந்துகொண்டு, அரசு தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தியை வாசித்து உரைநிகழ்த்தினார்.

ஹான் ஜெங் கூறுகையில், கடந்த 55 ஆண்டுகளில் சீனா-அமெரிக்கா உறவு பொதுவாக சீராக முன்னேறி வந்துள்ளது என்றார். நிலையான, ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல சீனா-அமெரிக்கா உறவு, இருநாட்டு மக்களின் பொது நலனுக்கும் சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்புக்கும் ஏற்றது என்று நடைமுறைகள் நிரூபித்துள்ளன. இருதரப்புகளும் இருநாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, பரஸ்பர மதிப்பை கடைபிடித்து, அமைதியான சகவாழ்வின் அடிப்படையில் கூட்டு வெற்றி பெறும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author