சீனாவின் ரென்ஐ ஜியாவ் பகுதியில் பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில், சீனக் கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் ஜுலை 21ஆம் நாள் சீனாவிற்கான பிலிப்பைன்ஸ் தூதரை அவசரமாக வரவழைத்து அவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சீனாவின் நான்ஷா தீவுகளின் ஒரு பகுதியான ரென்ஐ ஜியாவ், சீனாவின் உரிமை பிரதேசமாகும் என்றும், இப்பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளைச் சீனக் கடலோரக் காவல்படையினர் மேற்கொள்வது சட்டப்பூர்வமானது என்றும் சீனா சுட்டிக்காட்டியது. ஆத்திரமூட்டும் செயலை மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் உண்மைகளைத் திரித்துகூறி, தீய நோக்கத்துடன் மிகைப்படுத்தியுள்ளது. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும், பிலிப்பைன்ஸ் உடனடியாக ஆத்திரமூட்டுதல் மற்றும் மிகைப்படுத்தல் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும், பிராந்திய இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமை நலன்களை உறுதியுடன் பாதுகாப்பதற்காக சீனா நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
