சீனா லாவோஸ் மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகஸ்ட் 15ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் ஆன் நிங்கில் முறைசாரா சந்திப்பு நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது, எல்லையைத் தாண்டிய குற்றச்செயல்களை கூட்டாக ஒடுக்குவது குறித்து 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சட்ட நடைமுறைக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும், இணைய சூதாடு மற்றும் தொலைபேசி மோசடி, போதைப் பொருட்களின் வியாபாரம் மற்றும் ஆயுதங்களின் கடத்தல், மனித கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றச்செயல்களை ஒடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும் நான்கு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.