தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதலா? டிரம்ப் அரசின் அடுத்தகட்டத் திட்டம்?

Estimated read time 1 min read

வாஷிங்டன் : வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலைச் மனதில் கொண்டு, தேர்தலுக்கு முன்பு பெரிய அளவில் ராணுவ மோதல்களில் ஈடுபட வேண்டாம் என்பதில் அமெரிக்க அரசு கவனமாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் ஈரான் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தக் கூடும் என்ற கணிப்புகள் வலுத்துள்ளன. அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதற்கான பல குறிப்புகளை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்த உடனே அமெரிக்கா தரப்பிலிருந்து ஈரான் மீது குறுகிய காலத்தில் மிக தீவிரமான வான்வழி மற்றும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என வளைகுடா மற்றும் அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ரகசிய எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் திட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் தனது தரப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டாலும், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் கட்டமைப்புகள், அத்துடன் ஏஐ (AI) டேட்டா சென்டர்கள் போன்றவற்றை குறிவைத்துத் தாக்கப் போவதாக ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக, உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. மோதல் வெடித்தால் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வதற்கும், சர்வதேச பொருளாதாரச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் இந்தப் பிரச்சினையை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author